Monday, 16 October 2017

Laptop and Computer service at Ammapet, salem, Tamilnadu.

Just one call to us we are there in your place within a hour for your service.  We provide service for Laptops, computers and other IT peripherals at your doorstep.

Friday, 22 April 2016

பழைய கணினிகளை மின்னல் வேகத்தில் இயக்க இதை தான் செய்யனும்.




டிஸ்க் கிளீன் செயல்படுத்தவும் இதற்கு திரையின் வலது ஓரத்திற்கு சென்று செட்டிங்கை தட்டவும். (அல்லது நீங்கள் mouse பயன்படுத்தினால் திரையின் கீழே வலது ஓரத்தில் குறிபார்த்து mouse பாயிண்டரை மேலே செலுத்தவும். பின்பு செட்டிங்கை கிலிக் செய்யவும்) பிறகு கண்ட்ரோல் பேனலை தட்டி சர்ச் பாக்ஸில் அட்மின் என்று டைப் செய்யவும். Administrative toolsஐ தட்டி அல்லது கிலிக் செய்து டிஸ்க் கிளீன் அப் என்பதை இருமுறை கிலிக் செய்யவும்


அங்கீகரிக்கப்பட்ட ஆண்டிவைரஸ் நிறுவவும்
அங்கீகரிக்கப்பட்ட ஆண்டிவைரஸ் நிறுவலாம். ஆண்டிற்கு ரூ.300 முதல் ரூ.400க்குள் இருக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருளை பெற்று கொள்ளவது போதுமானது. இது அங்கீகாரமற்ற ப்ரோகிராம்கள் நிறுவுவதை தவிர்க்க உதவும். இதனால் வைரஸ் பாதிப்பில் இருந்து உங்கள் கணினி காக்கப்படும்.




சி கிலீனர் பயன்படுத்தவும் இது தற்காலிக கோப்புகளை அழிக்க உதவும். கேச்சே போன்ற கொப்புகள் உங்கள் கணினியை மெதுவாக செயல்பட வைக்கலாம். அவற்றை நீக்க இது உதவுகின்றது இந்த மென்பொருள் இலவசம் தான். இது எல்லா கணினிகளுக்கும் ஒத்துவரும்.

தேவையில்லாத ப்ரோகிராம்களை நிறுவி இருந்தால் நீக்கவும்
உங்கள் கணினியில் அதிகமாக ப்ரோகிராம்கள் இருந்தாலும் கணினி மெதுவாக செயல்படும். ஆகையால் தேவையில்லாத ப்ரோகிராம்கள் நிறுவப்பட்டிருந்தால் அவற்றை நீக்கினால் போதும், கணினி வேகமாக செயல்படுவதை காண முடியும். Show Thumbnail


உங்கள் வன்பொருளை டீஃப்ராக்மெண்ட் செய்யவும்
ஸ்டார்ட் பொத்தானை கிலிக் செய்து டிஸ்க் டீஃப்ராக்மெண்டை திறக்கவும். சர்ச் பாக்ஸில் Disk Defragmenter என்று டைப் செய்யவும். பிறகு ரிஸல்ட் பட்டியலில் Disk Defragmenter என்பதை கிலிக் செய்யவும். இந்த முறைகளை பின்பற்றவும். இது முடிய பல மணி நேரம் ஆகலாம். இது அளவை மற்றும் வன்பொருளின் பிரிவின் டிகிரியை பொருத்தது. இந்த செயல் நடைபெறும் பொழுது நீங்கள் கணினியை பயன்படுத்தலாம்.

உங்கள் கணினி அல்லது லேப்டாப் பழையதானால் சில நேரங்களில் அவை மெதுவாக செயலப்படும். புதிய ப்ரோகிராம்கள் பழைய கணினியில் செயல்படாமல் இருக்கலாம். இருப்பினும் கணினி மெதுவாக செயல்பட பல காரணங்கள் இருக்கும். நெட் பயன்படுத்தும் போது கோப்புகளை டவுன்லோட் செய்யும்போதும் கணினி மெதுவாக செயல்படும். நீங்கள் அதற்காக பணம் செலவு செய்யாமலே உங்கள் கணினியை வேகமாக செயல்பட வைக்க முடியும்.

ஒரு ரூபாய் இருந்தால் லேப்டாப் வாங்கலாம்.! டெல் நிறுவனம் அதிரடி



டெல் இன்ஸ்பைரான் 15 3551 இதன் விலை ரூ.19,099 2.1 ஜிகாஹெர்ட்ஸ் பென்டியம் குவாட் கோர் பிராசஸர் 2 ஜிபி ரேம் 15.6 இன்ச் திரை 500 ஜிபி ஹார்டு டிரைவ்

டெல் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 'பேக் டூ ஸ்கூல்' எனும் திட்டத்தை துவக்கி மாணவர்களுக்கு புதிய லேப்டாப் கருவிகளை வெறும் 1 ரூபாய்க்கு வழங்குகின்றது. மீதி தொகையை தவனை முறையில் செலுத்தினால் போதும் என தெரிவித்துள்ளது. இந்த சலுகை மே மாதம் நிறைவடைகின்றது. டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் பேக் டூ ஸ்கூல் திட்டம் மார்ச் 22 ஆம் தேதி முதல் மே மாதம் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். அனைத்து டெல் லேப்டாப் கருவிகளும் பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் கிடைக்கின்றது. டெல் வாடிக்கையாளர்கள் டெல் இன்ஸ்பிரான் கணினி அல்லது ஆல் இன் மாடல் அல்லது, இன்ஸ்பிரான் வகை லேப்டாப் கருவிகளை ரூ.1 முன்பணம் செலுத்தி வாங்க முடியும். மேலும் டெல் இன்ஸ்பையர் கணினி அல்லது ஆல் இன் ஓன் சீரிஸ் வாங்கி கூடுதலாக ரூ.999 செலுத்தினால் கூடுதலாக இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி, ஒரு ஆண்டிற்கு எட்யூரைட் கன்டென்ட் பேக் மற்றும் பேட்டா பரிசு கூப்பன் பெறலாம். இன்ஸ்பைரான் 3000 சீரிஸ் லேப்டாப் வாங்குவோருக்கும் ரூ.999க்கு இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி பெறலாம். பேக் டூ ஸ்கூல் திட்டமானது படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என டெல் நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிக்க கணினியை ஒரு பயனுள்ள கருவியாக வழங்க டெல் முயற்சித்து வருவதாகவும் அந்நிறுவன செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேக் டூ ஸ்கூல் திட்டமானது நாடு முழுவதும் இயங்கி வரும் அதிகாரப்பூர்வ டெல் விற்பனை நிலையங்கள் மற்றும் CompuIndia இணையதளத்தில் செல்லுபடியாதும். கருவிகளை வாங்கிய முதல் ஏழு நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் தங்களது கருவிகளை பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அந்நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.

Thursday, 24 March 2016

பள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்

டக்ஸ் பெயிண்ட் என்பது 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படம் வரைவதற்காக உதவும்.1
ஸ்க்ராட்ச் என்பது நிகழ்வு சார்ந்த நிரலாக்க (Event driven programming) மொழி. இம்மொழியை கொண்டு அசைவூட்டும் படங்கள், செயல்பாடுகள், கதைகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை உருவாக்கி மாற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலும்.
2
இசுட்டெல்லேரியம் (Stellarium) என்பது வானிலுள்ள கோள்களின் உருவ அமைப்பை காண உதவும்.
3
கால்சியம் (Kalzium) என்பது கட்டற்ற ஆவர்த்தன (Periodical table) அட்டவணை
மென்பொருள். இது தனிமங்களை பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள உதவும் தொழில்நுட்பம்.

கிம்ப் (GIMP அல்லது GNU Image Manipulation Program) என்பது ‘அடோப் ஃபோட்டோஷாப்’ மென்பொருளுக்கு நிகராக உருவாக்கப்பட்ட ஒரு பொது நிரலாக்க மென்பொருள் ஆகும்.

பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் பட்டியலில் பொய்யான நண்பர்களை எப்படி கண்டறிவது?

images (4)
என்னதான் பேச்புக்கின் பிரண்ட்ஸ் லிஸ்ட்டில்  உங்களுடன்  பலர் தொடர்பிலிருந்தாலும் அவர்கள்  யாவரும் உங்கள் உண்மையான நண்பர்கள் இல்லை.பேஸ்புக்கில் இருக்கும் உங்கள் நண்பர்களில் முக்கால்வாசி பேர் பொய்யானவர்களே!  என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது . மனிதவியல் ஆராய்ச்சி நிபுணர்கள்  நடத்திய சமீபத்திய ஆய்வின் படி   பேஸ்புக்கில் நாம் பழகும் நண்பர்கள்  அனைவரும் நேரில் பார்க்காதவர்களே அவர்களில் எத்தனை பேர்  உண்மையான  நண்பர்கள் எத்தனை பேர் உண்மையாகவே ஒரு நண்பருக்காக நினைத்து  கவலைப்படுகிறார்கள் என்ற ஆராய்ச்சியை  நடத்தியது.  சமூக வலைதள  நண்பர்களுக்கும் உண்மையில் நாம் நேரில் பார்த்து பழகும் நண்பர்களுக்கும் இருக்கும் வேறுபாட்டை இந்த கருத்துக் கணிப்பு வெளிக்கொண்டுவந்துள்ளது.   பிரிட்டனில் உள்ள  ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழக பேராசிரியர் ராபின் டன்பர் பேஸ்புக் நண்பர்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டதில்  கிடைத்த தகவல்களின் படி   பேஸ்புக்கில் இருக்கும் 150  நண்பர்களில் 15 நண்பர்கள் மட்டுமே உங்களுக்கு தெரிந்த நண்பர்கள்  அதில் உங்களைப் பற்றி கவலைப்படுபவர்கள்  5 பேர் மட்டுமே!  மற்றும்  உங்கள் நண்பர் பட்டியலில் 27 சதவிகிதம் மட்டுமே உண்மையானவர்கள் என்ற தகவலை அளித்துள்ளார்.
மற்றவை எல்லாம் எதோ ஒரு வணிக நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட போலி கணக்குகள்.  இணையத்தில் ஒரு வணிக நிறுவனம் தங்களுக்கு இந்த நாட்டை சேர்ந்த 10 லட்சம் பேர் எங்கள் பக்கத்தை லைக் செய்யத் தேவை என ப்ராஜக்ட் கொடுப்பார்கள் அதன் படி இணைய மார்கட்டிங் நிறுவனங்கள் சில பிரத்யோக மென்பொருள் மூலம் ஆயிரகணக்கான ப்ரோபல்களை தினமும் உருவாக்கி அந்த புரொபைல் களுக்கு அதிக நண்பர்களை சேர்ப்பார்கள் அப்படி வரும் நட்பு அழைப்புகள் அமேரிக்கா, ஐரோப்பாவில் அதிகம்.
​ ஒரு பெண் புரொபைல் படம் வைத்து நட்பு அழைப்பு வந்தால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அந்த நபரின் புரொபைல் படத்தின் இட முகவரியை காப்பி செய்து google image search இல் தேடி அது உண்மையான படமா இல்லை வேறு நபரின் படமா என எளிதில் பார்த்துவிடலாம்​
ஆபாசமாக பேச, பிறரை திட்ட, ஏமாற்ற, கண்காணிக்க என ஒரு நபரே வேறு சில புரொபைல் வைப்பதும் வெகு பரவலாக இருக்கிறது. உங்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் முதலில் வருவோர் உங்கள் நிகழ் கால நண்பர்கள் மட்டுமே, நிழல்  உலக நண்பர்கள் ஒரு லைக் போட்டுவிட்டு போய்விடுவார்கள் என இந்த ஆய்வு சொல்கிறது.
அனால் இருக்கும் அந்த ஓரிரு உண்மையான நண்பர்களால் தான் சென்னை பெருவெள்ளத்தில் பல நிவாரண / மீட்பு பணிகள் முகநூல்  தமிழ்நாட்டில் நடந்ததை நாம் அறிவோம்.

Saturday, 27 February 2016

கம்ப்யூட்டரை சாப்பிடும் USB டிரைவ்கள்:

இந்த வீடியோவை பார்த்த பிறகு தேவையில்லாத மற்றும் சமந்தமில்லாத மர்மமான டிரைவ்களை அடிக்கடி கணினியில் போடுவதைத் தவிர்க்கவும். இதைப் பற்றிய சோதனையில் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். அதாவது ஒரு முறை USB டிரைவ்களை உள்ளே போடும்போது அது அதிக மின்சார பாய்ச்சலினால் கணினியை ஷட்டவுன் செய்கிறது அல்லது மொத்தமாக அளித்தே விடுகிறது. இது ஒரு அதிநவீன தாக்குதலாக கருதப்படவில்லை மாறாக USB டிரைவிலிருந்து காத்துக் கொள்ளவது கஷ்டமாவதால்தான் இந்த தாக்குதல் நடக்கிறது . USB டிரைவ் மின்சாரமில்லாமல் வேலை செய்ய முடியாது என்பதால் சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை தடுக்க முடிவதில்லை . USB டிரைவ் ஒரு வளைய மின் சுற்றில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் . இந்த செயல்பாடு நடந்து கொண்டிருக்கும் வரையில் சாதனங்கள் உடைக்கப்பட வாய்ப்புண்டு. அதனால் மர்மான முறையில் இருக்கும் ட்ரைவ்களை கணினியில் உபயோகப்படுத்துவதை நிறுத்தவும்.

Friday, 26 February 2016

4GB அடங்கிய முழு பைலை PENDRIVE ல் Copy செய்வது எப்படி?

என்னாட இதுல என்ன இருக்கு என என நினைக்கிறிங்களா ஆமாம் உதாரணத்திற்க்கு OS .ISO FILE 4GBக்கு மேல் அடங்கி இருக்கும் இதனை PENDRIVE ல் காப்பி செய்ய இயலாது முயற்ச்சித்து பாருங்கள் அப்படி ஆகவில்லை என்றால் உங்கள் பென்ரைவில் ஒரு மாற்றம் செய்தால் போதும் காப்பி ஆகும் .
.பென்ரைவ் RIGHT CLICK செய்து FORMAT ஆப்சன் தேர்வு செய்து அதில் FAT32 ல் உள்ளதை மாற்றி NTFS செலக்ட் செய்து Format செய்தால் போதும் பிறகு காப்பி செய்து பாருங்கள் காப்பி ஆகும் …
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்கிறது எனது நோக்கம்
எனக்கு இந்த நேரம் எனது கல்லூரி ஆசிரியர் நினைவுக்கு வருகிறார் அவர் பெயர் இராகவேந்திர பிரசாத் Distributed System என 8வது செமஸ்டரில் பாடம் எடுத்தார் அப்ப இந்த File allocation பற்றி நடத்தியது நினைவுக்கு வருது
...
நா இப்பலாம் விழியத்த நேர சொல்லிட்டு அதன்பிறகு விளக்கம் தர முடிவு எடுத்து இருக்க xfat,fat,fat32,ntfs என பார்மட் வகைகளில் FAT32 மற்றும் NTFS பெரும்பாலும் பார்த்து இருப்பிர்கள். FAT32(FILE ALLOCTION TABLE) , அடுத்து NTFS(NEW TECHNOLOGY FILE SYSTEM) இது இரண்டில் NTFS தான் சிறந்தது...NTFS ல் வைரஸ் அவ்வளவு சீக்கரம் அட்டாக் ஆகாது.
அது மட்டும் அல்லாமல் புது பார்மட் (LATEST), 4GB க்கு மேல் கொண்ட ஒரு முழு பைலை காப்பி செய்ய இயலும்... OS INSTALL செய்யும் போது கூட HARDDISK யை NTFS ல் தான் பார்மட் செய்ய வேண்டும்...FAT32ல் NTFSற்கு தலைகீழ்

HP Scanjet 200 flatbed scanner drivers and softwares from original cd

  HP Scanjet 200 flatbed scanner drivers and softwares from original cd Full software and driver download link is    https://u.pcloud.link/p...